அசோகன் முத்துசாமி
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது சதியா விபத்தா என்கிற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. காரணம், அகமதாபாத் விரைவு நீதிமன்றம் அந்த எரிப்பு வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு.
எரிப்பு சம்பவம் நடந்து, அதைக் காரணம் காட்டி சுமார் 1200க்கும் மேற்பட்ட மு°லிம்கள் வேட்டையாடப்பட்ட சில மாதங்களில் ரயில்வே துறை ஒரு விசாரணை நடத்தியது. அது அமைத்த பானர்ஜி கமிஷன் ரயில் எரிப்பு ஒரு விபத்து என்று அறிக்கை அளித்தது. ஆனால், நரபட்சிணி நரேந்திர மோடி அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏன் ஒப்புக் கொள்ளவில்லை?
2002 பிப்ரவரி 27ம் தேதி ரயில் எரிகின்றது. 28ம் தேதி சங் பரிவாரம் பந்த் நடத்துகின்றது. அன்றிலிருந்து தொடர்ந்து பல நாட்கள் விட்டு விட்டு குஜராத் மாநிலமெங்கும் கலவரங்கள் நடக்கின்றன. மன்னிக்கவும். கலவரங்கள் அல்ல, மு°லிம்கள் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. மோடி அதை நியாயப்படுத்துகின்றார். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச் செயல் உண்டு என்கிறார். ‘மு°லிம்கள்’ 59 இந்துக்களை, பெரும்பாலும் கரசேவகர்களை, கொழுத்தினார்கள். பதிலுக்கு நாங்கள் அவர்களை கொன்று குவிக்கிறோம். இதுதான் அவரது வாதம்.
இப்படிச் சொன்ன பிறகு ரயில் எரிந்தது விபத்தினால்தான் என்றால், படுகொலைகளை நியாயப்படுத்த முடியாது அல்லவா? ஆதலால், அவர் இது கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிக்னல் பாலியா என்கிற அரைச் சேரியைச் சேர்ந்த மு°லிம்கள்தான் ரயிலுக்கு திட்டமிட்டு தீ வைத்தார்கள் என்றார். அதற்கான சதியை அவர்கள் முதல் நாளே தீட்டி விட்டார்கள் என்றார். அவரது கட்சியும், அவரது அரசாங்கமும் அதையே சொன்னது. நியூட்டனின் விதிப்படி வேட்டையாடியது போதாதென்று இப்போது மேலும் 31 மு°லிம்களை சட்டபூர்வமாக வேட்டையாடப் போகின்றார்கள். நிற்க.
தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன.
மவுலானா உமர்ஜி என்பவர்தான் பிரதான சதிகாரர் என்று காவல்துறை கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கூறி வருகின்றது. குற்றப் பத்திரிக்கையில் அவரும், கோத்ரா நகராட்சியின் தலைவராக இருந்த பிலால் ஹீசேன் என்பவரும் முக்கிய சதிகாரர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். ஆனால், அவர்கள் இருவரையும் சான்றுகளே இல்லை என்று நீதிமன்றம் விடுவித்து விட்டது. எப்படி இருக்கிறது கதை? முக்கிய சதிகாரர்கள் என்னப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்குமாம். ஆனால், சதிதான் நடந்தது என்று தீர்ப்பு வழங்குமாம்.
அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு போலவே இருக்கின்றது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக உள்ளே கொண்டு வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளுமாம். ஆனால், ராமர் அங்குதான் பிறந்தார் என்கிற சங்பரிவாரத்தின் வாதத்தையும் ஏற்றுக் கொள்ளுமாம், நிலத்தைப் பகிர்ந்தளிக்குமாம். அதாவது உண்மைகள் எப்படி இருந்தபோதிலும், வாதங்கள் எப்படி இருந்த போதிலும் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற முன் முடிவுடன் வழங்கப்பட்டது போல் இருக்கிறது அந்த தீர்ப்பு.
இந்த இருவர் மீது சாட்டப்படும் முக்கிய குற்றம் என்ன தெரியுமா? உமர்ஜி ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த மசூதியிலிருந்த ஒலிபெருக்கியின் மூலம் கோத்ரா மக்களை ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று சபர்மதி ரயில் பெட்டியில் உள்ள கரசேவகர்களைக் கொல்லுமாறு கத்தினார் என்பது குற்றச்சாட்டு. ரயில் நின்றிருந்த நடைமேடையியினருகில் தீ வைப்பதற்காக ஆட்களைத் திரட்டி வைத்திருந்தார் என்பது பிலால் மீதான குற்றச்சாட்டு. அவர்கள் இருவரையும் விடுவித்து விட்டு சதி என்று சொல்வதற்குக் காரணம் வேறு மாதிரி சொல்லக் கூடாது என்கிற முன் முடிவாகத்தான் இருக்க முடியும்.
நீதிமன்றம் முக்கிய ஆதாரமாகக் கொண்ட சாட்சிகள் அனைத்துமே சந்தேகத்திற்குரியவை. அஜய் பாரியா என்கிற கோத்ரா ரயில் நிலைய டீக்கடைக்காரர், மசூதியின் அருகே வசிக்கும் சிக்கந்தர் முகம்மது, தீ வைப்பதற்கு பெட்ரோல் வாங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பங்கில் வேலை பார்க்கும் பிரபாத்சிங் சவுகான், ரஞ்ஜித் ஜோதா ஆகியோர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சலீம் பெஹ்ரா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையே நீதிமன்றம் தனது தீர்ப்பிற்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால், இவற்றை நம்ப முடியாது, ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்ஷி.
ஏனெனில், இவர்கள் ஐந்து பேரும் தங்களது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர். அஜய் பாரியா மற்றும் சிக்கந்தர் ஆகியோரிடம் சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்தே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் முதலில் தாங்கள் வாகனங்களுக்குத் தவிர தனியாக பெட்ரோல் விற்கவே இல்லை என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நோயல் பார்மர் என்கிற கிரைம் பிராஞ்ச் அதிகாரிக்கு மாற்றப்பட்ட பின்னரே சங் பரிவாரத்திற்குச் சாதகமான வாக்குமூலங்கள் அவர்களிடமிருந்து பெறப்பட்டன என்கிறார் முன்ஷி. மேலும், சலீமின் ஒப்புதல் வாக்குமூலமம் பொடா சட்டம் அமலில் இருந்தபோது பெறப்பட்டதாகும். பொடாச் சட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் அவர். (ஆதாரம்: மான° தா°குப்தா, தி ஹிந்து, 23.2.11).
விபத்து, சதி தவிர மற்றொரு கோணமும் இந்த கொடுமைக்குக் கூறப்படுகின்றது.
டைம்° ஆப் இந்தியாவின் கிங்சுக் நாக் தன்னுடைய வலைத்தளத்தில் கடந்த 23ம் தேதி பின்வருமாறு எழுதியள்ளார்.
‘பிப்ரவரி 27க்குப் பிறகு ஒரு மாத காலம் நானும் மற்ற பலரைப் போல் சபர்மதி எக்°பிர° ரயிலின் எ°-6 பெட்டி வேண்டுமென்றே கொளுத்தப்பட்டது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் நான் கோத்ராவிற்கு சென்றிருக்கவில்லை. மார்ச் 2002 இறுதியில் நான் கோத்ரா சென்றபோதுவழக்கை விசாரித்துக் கொண்டிருந்த பாவா என்கிற டிஎ°பி மற்றும் அவரது மேலதிகாரி ஐஜி அக்ஜா ஆகியோரைச் சந்தித்தேன். கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த புறக் காவல் நிலையத்தில் அவர்கள் இருவரும் இருந்தனர். சதி முடிச்சை விடுவிப்பதில் எவ்வளவு துhரம் முன்னேறியிருக்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்டேன். ஒரு வேளை சதி நடந்திருந்தால் இன்று வரை அதற்கான சான்று தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றனர். அவர்கள் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு ‘சான்று எதுவும் இல்லை என்றால் பெட்டி எப்படி எரிந்தது?’ என்று அவர்களைக் கேட்டேன். நிச்சயமாகச் சொல்ல முடியாது என்ற அக்ஜா , நடைமேடையில் எப்போதும் டீ விற்பவர்கள் 20,30 பேர் இருப்பார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் சிறு கே° சிலிண்டரும் அடுப்பும் கைககளில் வைத்திருப்பார்கள் என்றும், டீ விற்பவர்களுக்கும் கரசேவகர்களுக்கும் இடையில் அப்போது நடந்த மோதல் மோசமடைந்து டீ விற்பவர்கள் சிலர் எரியும் அழுக்குத் துணிகளை பெட்டிக்குள் வீசியிருக்கலாம் என்றார். இதனால் நெருப்பு பற்றியிருக்கலாம் என்றும், இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறதேயொழிய, தான் உறுதியாகச் சொல்லவில்லை என்றும் மேலும் கூறினார். நான் ஐஜியிடம் அவரது பெயரைக் குறிப்பிட்டு இந்த செய்தியை வெளியிடலாமா என்று கேட்டேன். ஆம் என்று சொன்ன அவர் உணர்ச்சிவசப்பட்டார். தான் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ஓய்வு பெறப்போவதால் உண்மையைத் தவிர வேறு எதைப் பற்றியும் தான் கவலைப்படப் போவதில்லை என்றார். பாவாவைப் பார்த்தபடி அவர் கூறினார்: ‘இவருக்கு இன்னும் ஒரு மாதம்தான் சேவை பாக்கியிருக்கின்றது. அவரும் ஏன் கவலைப்பட வேண்டும்?’. (டைம் °ஆப் இந்தியா வலைப்புள்ளிகள்).
செய்தி அப்படியே டைம்° ஆப் இந்தியாவின் அனைத்து பதிப்புகளிலும் வெளியிடப்பட்டது. செய்தி வெளியான அன்று பிற்பகலில் அக்ஜா அவருக்கு போன் செய்து புலம்பியிருக்கின்றார். அவருக்கு தொந்தரவுகள் ஆரம்பமாகிவிட்டிருந்தன. மாலையில் காவல்துறையின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் நாக்-கை தொடர்பு கொண்டிருக்கின்றார். நீங்கள் வெளியிட்டிருக்கும் செய்திதான் உண்மை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நாங்கள் ஒரு மறுப்பு வெளியிட வேண்டுமென்று அக்ஜா விரும்புகின்றார். நான் அனப்பி வைக்கிறேன். நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றிருக்கின்றார். வழ வழா கொழ கொழா என்று முழுப்பலாக இருந்த அதை நாக் குப்பையில் தாக்கி வீசிவிட்டார். பின்னர் அக்ஜா பதவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிக்னல் பாலியா பகுதியைச் சேர்ந்த மு°லிம்கள் செய்த சதி என்கிற மோடியின் கூற்றுக்கு ஏற்ப காவல்துறை வழக்கை ஜோடிக்க ஆரம்பித்தது என்று எழுதுகின்ற நாக் மேலும் ஒரு தகவைலக் கூறுகின்றார். காவல்துறை தாங்கள் விசாரித்த நேரடியாகப் பார்த்த சாட்சியங்களில் ஒருவர் சம்பவம் நடந்தபோது கோத்ராவிலிருந்து 25 கிமீ தொலைவில் பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
மொத்தத்தில் சதி என ஒன்று நடக்கவேயில்லை என்பதுதான் இதுவரையிலும் கிடைக்கும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை சதி என ஒன்று நடந்திருந்தால் அதைச் செய்தது சங் பரிவாரமாகத் தான் இருக்க முடியும். ஏனெனில், கோத்ரா சம்பவத்திற்கு மன்னரே மு°லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களின் பட்டியல், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மு°லிம் மாணவர்களின் பட்டியல், அவர்களது வீட்டு விலாசங்கள், இந்துக்களும் மு°லிம்களும் கலந்து வாழும் பகுதிகளில் மு°லிம்களுடைய வீடுகளின் பட்டியல் ஆகியவற்றை வி°வ இந்த பரிசத் கோத்ராவிற்கு சில மாதங்களுக்கு முன்பே எடுத்திருக்கின்றது. கோத்ரா நிகழவில்லை என்றாலும் மு°லிம்களுக்கு எதிரான படுகொலைகள் என்பது நிகழ்ந்திருக்கும். ஏனெனில், 50, 100 கடைகள் இருக்கும் வணிக வளாகங்களில் மு°லிம்களின் கடைகள் மட்டுமே சரியாகக் குறி வைத்து நாசம் செய்யப்பட்டன. உரிமையாளர் யார் என்றே தெரியாத சில நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர்தான் அவற்றின் உரிமையாளர்கள் மு°லிம்கள் என்பதே வெளி உலகிற்குத் தெரியவந்தது. (இதே கட்டுரையாளர் எழுதிய ‘நரபலியும் நரவேட்டையும்’ நூல்.)
காரியத்தைத் தீர்மானித்துக் கொண்டு காரணத்தை உருவாக்குவது உலகெங்கும் உள்ள பாசி°டுகளின் வழக்கமான பாணி. ஹிட்லர் கம்யூனி°டுகள் மீதும், எதிர்க்கட்சிகள் மீதும் பழி போடுவதற்காக ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்தான். ஹிட்லரின் நம்மூர் வாரிசுகள் சம்ஜாதா எக்°பிர°, மாலேகான் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வைத்து விட்டு மு°லிம்கள் மீது பழி போடுகிறார்கள். கோத்ரா விஷயத்திலும் அவர்களே செய்து விட்டு ஏன் மு°லிம்களின் மீது பழி போட்டிருக்கக் கூடாது? அப்படி இல்லை என்றால் அது வெறும் விபத்தாகவோ அல்லது பிளாட்பாரச் சண்டையின் விளைவாகோவாகத்தான் இருக்க முடியும்.
எப்படியாயினும் நாக் கூறுகின்றபடி, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு சொல்லப்படவில்லை.
------------------------------------------------------------24.2.11
No comments:
Post a Comment