மூலதனம் அடித்தித் தின்றும் தன்னைப் பெருக்கிக்கொள்ளும். பிச்சை எடுத்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். இரண்டையுமே சட்ட பூர்வமாக்கிக் கொள்ளும். முதலாவதற்கு இன்றைய உதாரணம் பட்ஜெட்டில் முதலாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் விலை உயர்வுகள் என்றால், இரண்டாவதற்கு மல்லையாக்களுக்கு வழ்ங்கப்படும் வங்கிக் கடன்களாகும். இரண்டுமே மக்களின் பணத்திலிருந்துதான் செய்யப்படுகின்றன.
மல்லையாவின் கிங்பிஷ்சர் ஏர்லைன்ஸ் பெரும் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அதனால அவருக்குச் சொந்தமான யுபி உள்ளிட்ட தாய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உதாரணமாக யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் 90% பங்குகள் கிங்க்பிஷ்சர் ஏர்லைன்ஸ் வாங்கியுள்ள கட்ன்களுக்கு பிணையாக வைக்கப்பட்டுள்ளன என இந்து நாளிதழின் (13.11.11) கட்டுரை ஒன்று கூறுகிறது. (மக்கள் பணத்திலிருந்து பெற்ற கடனுக்கு பிணையாக மக்களிடமிருந்து பங்காகப் பெற்ற பணமே பிணையாக வைக்கப்படுகிறது).அதாவது மல்லையா எதற்காக பங்குதாரர்களிடமிருந்து பணம் வாங்கினாரோ அந்தப் பணத்தை அவர்களிடம் சொல்லாமலேயே வேறு தொழிலில் முதலீடு செய்துள்ளார். சாமனியர்கள் அதைச் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? கையாடல் என்பார்கள். அதையும் மீறி அவரால் தன்னுடைய ஏர்லைன்ஸைக் காப்பாற்ற முடியவில்லை. அரசாங்கத்தை அணுக்குகிறார். தனக்குக் கடன் கொடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்க் கோருகிறார். காங்கிரஸ்-திமுக கூட்டணி அரச்சாங்கத்தின் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கேற்ப வங்கிகளுக்கு அறிவுறுத்துகிறார். மல்லையா தப்பிப்பதும் மூழ்குவதும் அரசாங்கத்தின் கொள்கைகளை தீர்மானிப்பதில் அவருக்கும் அவரது தொழில் எதிரிகளுக்கும் உள்ள செல்வாக்கை வைத்து நிர்ணயிக்கப்படுமா அல்லது பொதுவாக மூலதனத்திற்கு உள்ள செல்வாக்கை வைத்து நிர்ணயிக்கப்படுமா என்பதைப் பொறுத்தது.

No comments:
Post a Comment