Friday, February 24, 2012

பங்கரமான ஆயுதம்





 




அந்தக் குரங்கு
ஊமையாகவே இருந்திருக்கலாம்

யார் அழுதார்கள்
அது பேசவில்லை என்று?

அதன் நாக்கு
சுவைக்க மட்டுமே
தெரிந்ததாக இருந்திருக்கலாம்

சுழட்டத் தெரிந்திருக்க
வேண்டியதில்லை

அதன் பற்கள்
இரையை மட்டும் கடிக்கத்
தெரிந்தவையாக இருந்திருக்கலாம்

தொண்டையிலிருந்து எழுந்து
நாவால் வழிநடத்தப்படும்
காற்றோசையை
சொல்லாக மாற்றத்
தெரிந்திருக்க வேண்டியதில்லை

சுடும் நெருப்பாகவோ
வெட்டும் கத்தியாகவோ
துளைக்கும் அம்பாகவோ
தூக்கும் கயிறாகவோ

பயங்கரமான ஆயுதமாகவேதான்
எப்போதும் இருக்கிறது
பேசத் தெரிந்த 'மிருகத்தின்'
சொல்-
பேசத் தெரியாத 'மனிதர்களுக்கு!'

-அசோகன் முத்துசாமி












1 comment:

  1. அற்புதமான கவிதை ஆம் தோழரே பேசத் தெரிந்த 'மிருகத்தின்'
    சொல்-
    பேசத் தெரியாத 'மனிதர்களுக்கு!',,,<>>

    ReplyDelete